Friday 25 April 2008

சிரிங்க.. சிரிக்க மட்டுமே இது.

அயல்நாட்டு ஓலையைப் படிச்சுட்டு மன்னர் அப்செட் ஆனது ஏன்?''
''தயவுசெய்து புறாவைத் திருப்பி அனுப்பி விடவும்'னு பின்குறிப்பு எழுதி இருந்துச்சாம்!''

''என் பையன் இதுவரைக்கும் அறுபத்தஞ்சு கல்யாணம் பண்ணியிருக்கான்..!''
''பெரிய கிரிமினலா இருப்பான் போலிருக்கே!''
''யோவ்! ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ்ல வேலை பாக்கறான்யா!''

''ஹலோ... இன்ஸ்பெக்டர் சாரா?''
''ஆமாம்... யார் பேசறது?''
''சார், நான் கபாலி பேசறேன். ரெண்டாம் நெம்பர் தெருவுல ஒரு வீட்டுக்கு தொழில் பண்ண காம்பெளண்ட் சுவர் ரொம்ப உயரமா இருக்கு. நம்ம ஸ்டேஷன்ல ஏதாவது ஏணி இருக்குமா சார்..?''

''அந்தக் கதாசிரியர் சுமாரா எத்தனை கதைகள் எழுதியிருப்பார்னு சொல்லமுடியுமா?''
''இதுல என்ன கணக்கு வாழுது... அவர் எழுதின கதைகள் எல்லாமே சுமார்தான்!''

''நம்ம சொத்து மதிப்பு கேட்கிறாங்க...''
''யாரு?''
''பையனுக்கு அட்மிஷன் கேட்ட மெட்ரிக்குலேசன் பள்ளியில்தான்!''

''சமைக்கத் தெரியாததால என் வீட்டுல தினமும் சண்டைதான்...!''
''தெரிஞ்சவங்க யார்கிட்டவாவது போய் கத்துக்கலாமில்லே...?''
''நானும் அதையேதான் சொன்னேன். அவர் போக மாட்டேங்கறாரு...!''

''சார்... கேடி ராக்கப்பன் எங்களுக்கு அல்வா கொடுத்திட்டு தப்பிச்சிட்டான்...''
''திருட்டுப்பய! எனக்கு ஒரு துண்டு அல்வாகூட கொடுக்காமப் போயிட்டானே!''

அவன் ஏன் நீலநிறச் சட்டை போட்டுக் கொண்டிருக்கிறான் தெரியுமா?தெரியலையே!
வெறும் பனியனை மட்டும் போட்டுக் கொண்டு ஆபீசுக்கு வரக்கூடாது என்று தான்.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னோட வாட்ச் காவேரியிலே விழுந்துடுச்சு. ஆனா இன்னும் ஓடிக் கிட்டிருக்கு!
அதே வாட்சா?
இல்லே, காவேரி.

எனக்கு லேட் மேரேஜ்!
காலங்கடந்த வயசிலே கல்யாணமா?
அப்படியில்ல, பத்து மணிக்கு நடக்கவேண்டிய மேரேஜ் பத்தரை மணிக்கு நடந்துச்சு!

ஒருவர் : வாங்க, வாங்க!
மற்றவர் : உங்கள் வீட்டில் ஒரு போர்ஷன் காலியாக இருக்கிறதாமே!ஒருவர் : இந்தச் சாக்கிலாவது என்னைப் பார்க்க வந்தீர்களே!
மற்றவர்: சாக்கில் வரவில்லை! ஆட்டோவில் தான் வந்தேன்!

No comments: